கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிசுசெரிய பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை இன்றைய. தினம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பூநகரி பள்ளிக்குடா சந்தியில் இன்று காலை நடைபெற்றது.
வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் க்ளீன் சிறீலங்கா மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் ,வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பான மற்றும் சலுகைக் கட்டணத்திலான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக "சிசுசெரிய" (Sisu Seriya) பேருந்துச் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது .
பன்னிரண்டு வயது வரையான மாணவர்களுக்கு கட்டணத்தில் 25வீதமும் பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கட்டணத்தில் ஐம்பது வீதமும் அறவிடப்படுகின்றது.
கிளிநொச்சியில் மாணவர்களுக்கான சிசுசெரிய பேருந்து சேவை ஆரம்பம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிசுசெரிய பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை இன்றைய. தினம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பூநகரி பள்ளிக்குடா சந்தியில் இன்று காலை நடைபெற்றது. வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் க்ளீன் சிறீலங்கா மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் ,வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பான மற்றும் சலுகைக் கட்டணத்திலான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக "சிசுசெரிய" (Sisu Seriya) பேருந்துச் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது .பன்னிரண்டு வயது வரையான மாணவர்களுக்கு கட்டணத்தில் 25வீதமும் பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கட்டணத்தில் ஐம்பது வீதமும் அறவிடப்படுகின்றது.