• Nov 04 2026

36 ஆண்டுகளாகியும் விடுவிக்கப்படாத காணிகள்! பலாலி, வசாவிளான் சந்திகளில் மக்கள் போராட்டம்

Chithra / Nov 1st 2026, 4:50 pm
image

 

தமது காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கு மக்கள் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தியில் இன்றைய தினம்(01) ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர். 

 

கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

 

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை மயிலிட்டியிலும் மயிலிட்டி மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி போராட்டத்தை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.


36 ஆண்டுகளாகியும் விடுவிக்கப்படாத காணிகள் பலாலி, வசாவிளான் சந்திகளில் மக்கள் போராட்டம்  தமது காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கு மக்கள் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தியில் இன்றைய தினம்(01) ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.  கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை மயிலிட்டியிலும் மயிலிட்டி மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி போராட்டத்தை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement