• Nov 09 2026

திருகோணமலையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு – பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

Chithra / Nov 8th 2026, 12:10 pm
image

 திருகோணமலை, உப்புவெளி – கப்பல்துறை பகுதியில் வாடகை முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த 2ஆம் திகதி இரவு கப்பல்துறை சந்தியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வாடகை முச்சக்கர வண்டியின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.


இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸாரும் மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.


இதன்போது கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் துப்பாக்கிச்சூட்டின் பிரதான துப்பாக்கிதாரி கடந்த 6ஆம் திகதி இரவு திக்வெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் இரு சந்தேகநபர்கள் கடந்த 2ஆம் திகதி 32 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.


அவர்களிடம் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, கப்பல்துறை பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடனும் அவர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் 24, 28 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் திக்வெல்ல மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பிரதான துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டவர் முன்னர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவத்தின் பின்னணி, துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்களுக்கு இடையிலான தொடர்புகள் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.


திருகோணமலையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு – பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது  திருகோணமலை, உப்புவெளி – கப்பல்துறை பகுதியில் வாடகை முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 2ஆம் திகதி இரவு கப்பல்துறை சந்தியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வாடகை முச்சக்கர வண்டியின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸாரும் மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.இதன்போது கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் துப்பாக்கிச்சூட்டின் பிரதான துப்பாக்கிதாரி கடந்த 6ஆம் திகதி இரவு திக்வெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் இரு சந்தேகநபர்கள் கடந்த 2ஆம் திகதி 32 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.அவர்களிடம் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, கப்பல்துறை பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடனும் அவர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் 24, 28 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் திக்வெல்ல மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பிரதான துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டவர் முன்னர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவத்தின் பின்னணி, துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்களுக்கு இடையிலான தொடர்புகள் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement