• Nov 14 2026

பிக்குகள் எடுத்துள்ள முடிவு என்ன? நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் தொடரும் சத்யாகிரகம்!

Chithra / Nov 8th 2026, 11:53 am
image


அனுராதபுர புனித நகர திட்டத்திற்கு எதிராக, ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்யாகிரகப் போராட்டம், நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நேற்று (7) காலை அனுராதபுரம் ருவன்வெலிசாய அருகில் இந்த சத்யாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.


இதன்போது, போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றதைத் தொடர்ந்து, நேற்று மதியம் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.


குறித்த கூடாரத்தின் கட்டுமானப் பணிகளைத் தடுக்க பொலிஸார் முற்பட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை உருவானது.


இந்தச் சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் தகவல்களைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.


அதன்படி, ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமி பகுதிகளில் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும், போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


எனினும், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேறாமல், இரவையும் அதே பகுதியில் கழித்து தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

பிக்குகள் எடுத்துள்ள முடிவு என்ன நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் தொடரும் சத்யாகிரகம் அனுராதபுர புனித நகர திட்டத்திற்கு எதிராக, ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்யாகிரகப் போராட்டம், நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நேற்று (7) காலை அனுராதபுரம் ருவன்வெலிசாய அருகில் இந்த சத்யாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.இதன்போது, போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றதைத் தொடர்ந்து, நேற்று மதியம் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.குறித்த கூடாரத்தின் கட்டுமானப் பணிகளைத் தடுக்க பொலிஸார் முற்பட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை உருவானது.இந்தச் சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் தகவல்களைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.அதன்படி, ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமி பகுதிகளில் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.எனினும், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேறாமல், இரவையும் அதே பகுதியில் கழித்து தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement