• Apr 17 2026

பலத்த மின்னல் தாக்கம்; 07 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Chithra / Dec 5th 2025, 1:42 pm
image

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று நண்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல் இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதன்படி 07 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 08 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அறிவித்தல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


பலத்த மின்னல் தாக்கம்; 07 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல் இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 07 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 08 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, குறித்த அறிவித்தல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement