• Oct 15 2026

மக்களை பாதுகாக்கச் சென்ற இரு அதிகாரிகள் செய்த காரியம்! திருகோணமலையில் அதிகாலை பரபரப்பு!

Chithra / Oct 15th 2026, 10:35 am
image



திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குறித்த இருவரும் இன்று (15) வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும், அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், வனஜீவராசிகள் திணைக்களத்தின் மேற்பார்வையில் யானை மின்வேலிகளைப் பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளில் சிவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த இரு உத்தியோகத்தர்களையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.


இதன்போது, இருவரும் மதுபோதையில் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து போத்தலில் அடைக்கப்பட்டிருந்த சாராயமும் மீட்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து, குறித்த இரு உத்தியோகத்தர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மொரவெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


பின்னர், இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இருவரும் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட இரு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மொரவெவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


மக்களை பாதுகாக்கச் சென்ற இரு அதிகாரிகள் செய்த காரியம் திருகோணமலையில் அதிகாலை பரபரப்பு திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த இருவரும் இன்று (15) வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும், அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், வனஜீவராசிகள் திணைக்களத்தின் மேற்பார்வையில் யானை மின்வேலிகளைப் பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளில் சிவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த இரு உத்தியோகத்தர்களையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.இதன்போது, இருவரும் மதுபோதையில் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து போத்தலில் அடைக்கப்பட்டிருந்த சாராயமும் மீட்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, குறித்த இரு உத்தியோகத்தர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மொரவெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.பின்னர், இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இருவரும் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இரு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மொரவெவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement