ப்ளை துபாய் (Flydubai) விமான சேவையில் ஏற்பட்ட சம்பவம் காரணமாக, இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லவிருந்த இலங்கையைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் தலைவர் லால் ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞர், யுவதிகளை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இவர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான விமான சேவையை ஏற்பாடு செய்வதற்கான கேள்விப்பத்திரங்கள் இன்று (15) கோரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம், ஒரு மாத காலத்திற்குள் குறித்த இளைஞர், யுவதிகளை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் லால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தும் பயணிக்க முடியாத நிலையில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்க்கப்படுகின்றது.
வேலை கிடைத்தும் இஸ்ரேல் செல்ல முடியாத நிலை – 1,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தவிப்பு – நடந்தது என்ன ப்ளை துபாய் (Flydubai) விமான சேவையில் ஏற்பட்ட சம்பவம் காரணமாக, இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லவிருந்த இலங்கையைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் தலைவர் லால் ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.குறித்த இளைஞர், யுவதிகளை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, இவர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான விமான சேவையை ஏற்பாடு செய்வதற்கான கேள்விப்பத்திரங்கள் இன்று (15) கோரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம், ஒரு மாத காலத்திற்குள் குறித்த இளைஞர், யுவதிகளை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் லால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.இதன்மூலம், இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தும் பயணிக்க முடியாத நிலையில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்க்கப்படுகின்றது.