• Oct 14 2026

கொழும்பில் திடீரெனப் பற்றிய தீ! நான்காவது மாடியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு!

Chithra / Oct 14th 2026, 3:43 pm
image


கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பம்பலப்பிட்டி, காஸல் வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் நான்காவது மாடியிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


தீ பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தீயினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான விபரங்களும் வெளியாகவில்லை.


மேலும், இந்தச் சம்பவத்தில் எவரேனும் காயமடைந்துள்ளனரா என்பது தொடர்பிலும் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.


தீ விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கொழும்பில் திடீரெனப் பற்றிய தீ நான்காவது மாடியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பம்பலப்பிட்டி, காஸல் வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் நான்காவது மாடியிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தீயினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான விபரங்களும் வெளியாகவில்லை.மேலும், இந்தச் சம்பவத்தில் எவரேனும் காயமடைந்துள்ளனரா என்பது தொடர்பிலும் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.தீ விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement