• Oct 29 2026

முல்லைத்தீவில் அதிகரிக்கும் கடல் சீற்றம்! கரையை நோக்கி வந்த கடல் நீர் – பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்படும் மீன்பிடிப் படகுகள்

Chithra / Oct 28th 2026, 7:20 am
image


முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலவன் பொக்கணை கடற்பரப்பில் கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், கடல் நீர் கரையை நோக்கி வந்துள்ளதால் மீனவர்கள் தமது மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வருகின்றனர்.


குறித்த கடற்பரப்பில் கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், நேற்று (27) இரவு கடல் நீர் கரைப் பகுதியை நோக்கி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் கடல் அலைகளால் சேதமடைவதைத் தடுக்கும் நோக்கில், மீனவர்கள் அவற்றைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


இதேவேளை, முல்லைத்தீவு மாத்தளன் கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை (26) காலை மீன்பிடித் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான இரண்டு விசேட படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் திருகோணமலையிலிருந்து மற்றுமொரு விசேட படகு கோரப்பட்டுள்ளது.


குறித்த படகு முல்லைத்தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், அது வந்தடைந்ததும் தேடுதல் நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் இலங்கை விமானப்படையினரும் இணைந்து செயற்படவுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் சீற்றம் அதிகரித்துள்ள சூழலில், காணாமல் போன மூன்று மீனவர்களையும் மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் அதிகரிக்கும் கடல் சீற்றம் கரையை நோக்கி வந்த கடல் நீர் – பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்படும் மீன்பிடிப் படகுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலவன் பொக்கணை கடற்பரப்பில் கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், கடல் நீர் கரையை நோக்கி வந்துள்ளதால் மீனவர்கள் தமது மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வருகின்றனர்.குறித்த கடற்பரப்பில் கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், நேற்று (27) இரவு கடல் நீர் கரைப் பகுதியை நோக்கி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் கடல் அலைகளால் சேதமடைவதைத் தடுக்கும் நோக்கில், மீனவர்கள் அவற்றைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதேவேளை, முல்லைத்தீவு மாத்தளன் கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை (26) காலை மீன்பிடித் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான இரண்டு விசேட படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் திருகோணமலையிலிருந்து மற்றுமொரு விசேட படகு கோரப்பட்டுள்ளது.குறித்த படகு முல்லைத்தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், அது வந்தடைந்ததும் தேடுதல் நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் இலங்கை விமானப்படையினரும் இணைந்து செயற்படவுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் சீற்றம் அதிகரித்துள்ள சூழலில், காணாமல் போன மூன்று மீனவர்களையும் மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement