• Nov 05 2026

வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் மீட்பு!

Chithra / Nov 5th 2026, 10:10 am
image


நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் எரிவாயு கொள்கலன்களுக்கான தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு, பாவனையாளர் அதிகார சபையினால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இதன் ஒரு பகுதியாக, பாவனையாளர் அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி எச்.எம். இஹ்திசான் தலைமையில் நேற்றும் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 லிட்ரோ (Litro) எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


வவுனியாவின் பிரதான எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரினால் குறித்த எரிவாயு கொள்கலன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


பொதுமக்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட வேண்டிய எரிவாயு கொள்கலன்களைப் பதுக்கி வைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து, சம்பந்தப்பட்ட விநியோகஸ்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் மீட்பு நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் எரிவாயு கொள்கலன்களுக்கான தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு, பாவனையாளர் அதிகார சபையினால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, பாவனையாளர் அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி எச்.எம். இஹ்திசான் தலைமையில் நேற்றும் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 லிட்ரோ (Litro) எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.வவுனியாவின் பிரதான எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரினால் குறித்த எரிவாயு கொள்கலன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பொதுமக்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட வேண்டிய எரிவாயு கொள்கலன்களைப் பதுக்கி வைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, சம்பந்தப்பட்ட விநியோகஸ்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement