சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கியுள்ள சூழலில், தாமதமின்றி துரிதகதியில் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 03.06.2026நேற்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கிவருகின்றது. இந்நிலையில் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? அல்லது கடந்த காலங்களைப்போன்று நெற்கொள்வனவில் தாமதங்கள் ஏற்படுமா?
அத்தோடு சிறுபோக நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவுசெய்து களஞ்சியப்படுத்துவதற்கு நெல்சந்தைப்படுத்தல் சபைக்குரிய களஞ்சியசாலைகளில் இடவசதிகள் உள்ளதா? இந்த விடயங்கள் தொடர்பில் உரியதரப்பினர் விளக்கங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இங்குள்ள நெற் களஞ்சியசாலைகளில் நெல் நிரம்பியிருப்பதாக அறியமுடிகின்றது.
அப்படியிருக்கையில் சிறுபோகத்தில் அறுவடைசெய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடம் கொள்வனவு செய்து எங்கே களஞ்சியப்படுத்தி வைக்கப் போகின்றீர்களென்பது குறித்தும் உரியதரப்பினர் விளக்கந்தரவைண்டுமெனத் தெரிவித்தார்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் பதிலளிக்கையில்,
இந்தவிடயம் தொடர்பாக விவசாயத்திணைக்கள பணிப்பாளர் நாயகம், நெல்சந்தைப்படுத்தல்சபையினர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயங்கள் தொடர்பில் தெரிவித்திருக்கின்றோம்.
பெரும்பாலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நம்புகின்றோம்.
குறிப்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில், களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லை சந்தைப்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. நெல் சந்தைப்படுத்தல் தாமதப்படுவதால்தான், விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதிலும் தாமதங்கள் ஏற்படுகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் இதன்போது பதிலளித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தவிடயத்தில் கூடுதல் கவனஞ் செலுத்தப்படவேண்டும். ஏன்எனில் இவ்வாறு சிறுபோக நெல் கொள்வனவில் தாமதங்கள் ஏற்பட்டால் அனைத்து விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
அவ்வாறு விவசாயிகள் பாதிப்புக்களுக்குள்ளாகாதவாறு, விவசாயிகள் பயன் பெறக்கூடிய வழிவகைகளை மேற்கெள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.
விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் சிறுபோக நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவேண்டும் - ரவிகரன் எம்.பி வலியுறுத்து சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கியுள்ள சூழலில், தாமதமின்றி துரிதகதியில் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 03.06.2026நேற்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கிவருகின்றது. இந்நிலையில் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா அல்லது கடந்த காலங்களைப்போன்று நெற்கொள்வனவில் தாமதங்கள் ஏற்படுமாஅத்தோடு சிறுபோக நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவுசெய்து களஞ்சியப்படுத்துவதற்கு நெல்சந்தைப்படுத்தல் சபைக்குரிய களஞ்சியசாலைகளில் இடவசதிகள் உள்ளதா இந்த விடயங்கள் தொடர்பில் உரியதரப்பினர் விளக்கங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.இங்குள்ள நெற் களஞ்சியசாலைகளில் நெல் நிரம்பியிருப்பதாக அறியமுடிகின்றது.அப்படியிருக்கையில் சிறுபோகத்தில் அறுவடைசெய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடம் கொள்வனவு செய்து எங்கே களஞ்சியப்படுத்தி வைக்கப் போகின்றீர்களென்பது குறித்தும் உரியதரப்பினர் விளக்கந்தரவைண்டுமெனத் தெரிவித்தார்.இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் பதிலளிக்கையில்,இந்தவிடயம் தொடர்பாக விவசாயத்திணைக்கள பணிப்பாளர் நாயகம், நெல்சந்தைப்படுத்தல்சபையினர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயங்கள் தொடர்பில் தெரிவித்திருக்கின்றோம்.பெரும்பாலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நம்புகின்றோம்.குறிப்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில், களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லை சந்தைப்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. நெல் சந்தைப்படுத்தல் தாமதப்படுவதால்தான், விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதிலும் தாமதங்கள் ஏற்படுகின்றன.இந்த விடயங்கள் தொடர்பில் உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் இதன்போது பதிலளித்தார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,இந்தவிடயத்தில் கூடுதல் கவனஞ் செலுத்தப்படவேண்டும். ஏன்எனில் இவ்வாறு சிறுபோக நெல் கொள்வனவில் தாமதங்கள் ஏற்பட்டால் அனைத்து விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்.அவ்வாறு விவசாயிகள் பாதிப்புக்களுக்குள்ளாகாதவாறு, விவசாயிகள் பயன் பெறக்கூடிய வழிவகைகளை மேற்கெள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.