• Oct 21 2026

அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் பின்னடைவு! சஜித் கவலை

Aathira / Oct 20th 2026, 7:43 am
image

கொழும்புத் துறைமுகத்தின் தளவாட மையத் திட்டத்திலிருந்து சீன நிறுவனம் வெளியேறுவது மற்றும் முன்னணி சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் திரும்பப் பெறப்படுவது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கவலை வெளியிட்டுள்ளார்.  

தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவிலேயே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

அதிகளவிலான நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பதிலாக, பெருமளவிலான அந்நிய முதலீடுகள் நாட்டிலிருந்து வெளியேறுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றோமா?  

கொழும்புத் துறைமுகத்தில் 392 மில்லியன் டொலர் செலவில் மேற்கொள்ளப்படவிருந்த தளவாட மையத் திட்டத்திலிருந்து சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விலகியுள்ளது. 

அத்துடன் இந்தத் திட்டத்தை இரத்துச் செய்ததற்காக இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு 21.9 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்க உடன்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.   

இதுதவிர, எச்.எஸ்.பி.சி. குளோபல் சர்வீஸ் சென்டர் தனது சேவைகளைப் பிலிப்பைன்ஸுக்கு மாற்றக்கூடும் என்றும், இதன் காரணமாக 3 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகளும் 500 மறைமுக வேலைவாய்ப்புகளும் இழக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகின்றன.

இந்த வெளியேற்றம் 2027 டிசம்பருக்குள் நிறைவடையும் எனத் தெரிகின்றது. இந்தத் தகவல் உண்மையல்ல என்று நான் நம்புகின்றேன்.

ஏனெனில், இது உண்மையாகும் பட்சத்தில், அது நமது தாய்நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு ஈர்ப்பதற்கும், முதலீடுகள் வெளியேறுவதைத் தடுப்பதற்கும் அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றுள்ளது.

அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் பின்னடைவு சஜித் கவலை கொழும்புத் துறைமுகத்தின் தளவாட மையத் திட்டத்திலிருந்து சீன நிறுவனம் வெளியேறுவது மற்றும் முன்னணி சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் திரும்பப் பெறப்படுவது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கவலை வெளியிட்டுள்ளார்.  தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவிலேயே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-அதிகளவிலான நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பதிலாக, பெருமளவிலான அந்நிய முதலீடுகள் நாட்டிலிருந்து வெளியேறுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றோமா  கொழும்புத் துறைமுகத்தில் 392 மில்லியன் டொலர் செலவில் மேற்கொள்ளப்படவிருந்த தளவாட மையத் திட்டத்திலிருந்து சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விலகியுள்ளது. அத்துடன் இந்தத் திட்டத்தை இரத்துச் செய்ததற்காக இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு 21.9 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்க உடன்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.   இதுதவிர, எச்.எஸ்.பி.சி. குளோபல் சர்வீஸ் சென்டர் தனது சேவைகளைப் பிலிப்பைன்ஸுக்கு மாற்றக்கூடும் என்றும், இதன் காரணமாக 3 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகளும் 500 மறைமுக வேலைவாய்ப்புகளும் இழக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகின்றன.இந்த வெளியேற்றம் 2027 டிசம்பருக்குள் நிறைவடையும் எனத் தெரிகின்றது. இந்தத் தகவல் உண்மையல்ல என்று நான் நம்புகின்றேன்.ஏனெனில், இது உண்மையாகும் பட்சத்தில், அது நமது தாய்நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு ஈர்ப்பதற்கும், முதலீடுகள் வெளியேறுவதைத் தடுப்பதற்கும் அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement