• Nov 05 2026

சவால்களுக்கு மத்தியிலும் பணிகள் முன்னெடுப்பு-பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய!

Ziya / Nov 5th 2026, 10:27 am
image

அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாஓயா பொலிஸ் நிலையத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர்   சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய,   புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

மஹாஓயா பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த பொலிஸ் மா அதிபரை, கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார லியனகே அன்புடன் வரவேற்றார்.

வருகை தந்த பொலிஸ் மா அதிபருக்குக் கௌரவம் அளிக்கும் வகையில் பொலிஸாரின் விசேட அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அனைத்து மதச் சடங்குகளுடனும் ஆசிகளுடனும் புதிய உத்தியோகப்பூர்வ இல்லம் திறக்கப்பட்டது.

திறப்பு விழாவைத் தொடர்ந்து, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட  கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொலிஸார் மத்தியில் உரையாற்றினார்.

மஹாஓயா பொலிஸ் நிலையம் ஒரு பின்தங்கிய மற்றும் கடினமான சூழலில் அமைந்துள்ள பகுதியாகும். முறையான நிர்வாகக் கட்டட வசதிகள் கூட முழுமையாக இல்லாத இத்தகைய சவாலான சூழலிலும், புதிய உத்தியோகப்பூர்வ இல்லம் திறந்து வைக்கப்பட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படுவது பாராட்டுக்குரியது என சுட்டிக்காட்டப்பட்டதுடன், நிலையத்தில் நிலவும் ஏனைய குறைபாடுகளும் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார லியனகே, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, அம்பாறை - மட்டக்களப்பு மாவட்டங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்,  உள்ளிட்ட பல உயர் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சவால்களுக்கு மத்தியிலும் பணிகள் முன்னெடுப்பு-பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாஓயா பொலிஸ் நிலையத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர்   சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய,   புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.மஹாஓயா பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த பொலிஸ் மா அதிபரை, கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார லியனகே அன்புடன் வரவேற்றார்.வருகை தந்த பொலிஸ் மா அதிபருக்குக் கௌரவம் அளிக்கும் வகையில் பொலிஸாரின் விசேட அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அனைத்து மதச் சடங்குகளுடனும் ஆசிகளுடனும் புதிய உத்தியோகப்பூர்வ இல்லம் திறக்கப்பட்டது.திறப்பு விழாவைத் தொடர்ந்து, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட  கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொலிஸார் மத்தியில் உரையாற்றினார்.மஹாஓயா பொலிஸ் நிலையம் ஒரு பின்தங்கிய மற்றும் கடினமான சூழலில் அமைந்துள்ள பகுதியாகும். முறையான நிர்வாகக் கட்டட வசதிகள் கூட முழுமையாக இல்லாத இத்தகைய சவாலான சூழலிலும், புதிய உத்தியோகப்பூர்வ இல்லம் திறந்து வைக்கப்பட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படுவது பாராட்டுக்குரியது என சுட்டிக்காட்டப்பட்டதுடன், நிலையத்தில் நிலவும் ஏனைய குறைபாடுகளும் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார லியனகே, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, அம்பாறை - மட்டக்களப்பு மாவட்டங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்,  உள்ளிட்ட பல உயர் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement