• Oct 21 2026

ஆறு வைத்தியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருவர் மட்டுமே – சுகாதார சேவைகள் முடங்கும் அபாயமா? இலங்கையில் அதிர்ச்சி நிலை!

Chithra / Oct 21st 2026, 10:21 am
image


 

வைத்தியர்களுக்கான வருடாந்த இடமாற்றங்கள் மற்றும் உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமனங்களில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த நிலைமை தொடருமானால், நாட்டின் சுகாதார சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் அன்பாஸ் பாருக் தெரிவித்துள்ளார்.


அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டின் சுகாதார சேவைகள் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்கள் முதல் தொலைதூரப் பிரதேசங்கள் வரை சமமான தரத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.


இதற்கு அரசியல் தலையீடுகளின்றி, தாபன விதிக்கோவை மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கு அமைய, இடமாற்றக் குழுவின் ஊடாக வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்ட வைத்தியர்களுக்கான இடமாற்றப் பொறிமுறையே பிரதான காரணமாகும்.


எனினும், தற்போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை ஓரங்கட்டி, சட்டபூர்வமான இடமாற்றக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


இதன் விளைவாக நாட்டின் பல வைத்தியசாலைகளில் கடுமையான வைத்தியர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


குறிப்பாக, ஆறு வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டிய வைத்தியசாலைகளில் இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே பணியாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இத்தகைய சூழ்நிலை பொதுமக்களின் சுகாதார உரிமையைப் பாதிப்பதுடன், வைத்தியர்களின் தொழில்சார் உரிமைகளையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை, உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றுவதற்காகக் காத்திருக்கும் வைத்தியர்களுக்கான நியமனங்களும் பல வருடங்களாகத் தாமதிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


சுகாதார அமைச்சின் மந்தமான செயற்பாடுகளே இந்த நிலைமைக்குப் பிரதான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆறு வைத்தியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருவர் மட்டுமே – சுகாதார சேவைகள் முடங்கும் அபாயமா இலங்கையில் அதிர்ச்சி நிலை  வைத்தியர்களுக்கான வருடாந்த இடமாற்றங்கள் மற்றும் உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமனங்களில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலைமை தொடருமானால், நாட்டின் சுகாதார சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் அன்பாஸ் பாருக் தெரிவித்துள்ளார்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் சுகாதார சேவைகள் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்கள் முதல் தொலைதூரப் பிரதேசங்கள் வரை சமமான தரத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.இதற்கு அரசியல் தலையீடுகளின்றி, தாபன விதிக்கோவை மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கு அமைய, இடமாற்றக் குழுவின் ஊடாக வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்ட வைத்தியர்களுக்கான இடமாற்றப் பொறிமுறையே பிரதான காரணமாகும்.எனினும், தற்போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை ஓரங்கட்டி, சட்டபூர்வமான இடமாற்றக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதன் விளைவாக நாட்டின் பல வைத்தியசாலைகளில் கடுமையான வைத்தியர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறிப்பாக, ஆறு வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டிய வைத்தியசாலைகளில் இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே பணியாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இத்தகைய சூழ்நிலை பொதுமக்களின் சுகாதார உரிமையைப் பாதிப்பதுடன், வைத்தியர்களின் தொழில்சார் உரிமைகளையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றுவதற்காகக் காத்திருக்கும் வைத்தியர்களுக்கான நியமனங்களும் பல வருடங்களாகத் தாமதிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.சுகாதார அமைச்சின் மந்தமான செயற்பாடுகளே இந்த நிலைமைக்குப் பிரதான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement