முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுகேகொடையில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று (07) காலை சென்ற ஆணைக்குழுவின் அதிகாரிகள், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சிரிலிய சவிய’ அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ‘சிரிலிய சவிய’ நிதி விவகாரம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்ததுடன், அவரை கைது செய்வதைத் தடுக்க முன்பிணை கோரி மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வாக்குமூலம் பதிவு செய்ய வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள்; ஷிரந்தி ராஜபக்ச அதிரடிக் கைது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நுகேகொடையில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று (07) காலை சென்ற ஆணைக்குழுவின் அதிகாரிகள், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதன்போது ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‘சிரிலிய சவிய’ அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, ‘சிரிலிய சவிய’ நிதி விவகாரம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்ததுடன், அவரை கைது செய்வதைத் தடுக்க முன்பிணை கோரி மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.