• Nov 05 2026

தேசிய மட்டத்தில் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் சாதனை !

Ziya / Nov 5th 2026, 12:23 pm
image

தேசிய ரீதியில் நடைபெற்ற சம்பியன் லீக் உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியன் பட்ட ம் வென்ற யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தினை யாழ்ப்பாணம் மாநகரசபையின் சார்பில் கௌரவிக்கும் நிகழ்வு மாநகர கல்வி மற்றும் விளையாட்டுக் குழுத் தலைவர் அ.றொபின்சன் தலைமையில் பொது நூலக மண்டபத்தில் கடந்த (04) நடைபெற்றது.


மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினரா மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன் , கௌரவ விருந்தினராக ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) சண்.தயாளன் கலந்து சிறப்பித்தனர்.


மேற்படி நிகழ்வில் விருந்தினர்கள் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் கடந்த கால சாதனைகள், நாவாந்துறை ஊரின் பெருமைகள், கழகத்தின் முன்னாள் சாதனைகள் மற்றும் தற்போதைய வெற்றி உள்ளிட்ட விடயங்களை பாராட்டி வாழ்த்தினர்.


தேசிய மட்டத்தில் சாதனை நிகழ்த்திய சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் நிகழ்வு ஆரம்பத்தில் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், பிரதான நிகழ்வு மேடையில் வைத்து பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டு, இறுதியில் கழகத்திற்கு மாநகரசபையின் உயர் கௌரவமாக நினைவுக் கேடயமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


மேற்படி நிகழ்வில் மாநகர குழுக்களின் தலைவர்கள், விளையாட்டுக்குழு உறுப்பினர்கள், மாநகரசபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர், நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய மட்டத்தில் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் சாதனை தேசிய ரீதியில் நடைபெற்ற சம்பியன் லீக் உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியன் பட்ட ம் வென்ற யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தினை யாழ்ப்பாணம் மாநகரசபையின் சார்பில் கௌரவிக்கும் நிகழ்வு மாநகர கல்வி மற்றும் விளையாட்டுக் குழுத் தலைவர் அ.றொபின்சன் தலைமையில் பொது நூலக மண்டபத்தில் கடந்த (04) நடைபெற்றது.மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினரா மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன் , கௌரவ விருந்தினராக ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) சண்.தயாளன் கலந்து சிறப்பித்தனர்.மேற்படி நிகழ்வில் விருந்தினர்கள் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் கடந்த கால சாதனைகள், நாவாந்துறை ஊரின் பெருமைகள், கழகத்தின் முன்னாள் சாதனைகள் மற்றும் தற்போதைய வெற்றி உள்ளிட்ட விடயங்களை பாராட்டி வாழ்த்தினர்.தேசிய மட்டத்தில் சாதனை நிகழ்த்திய சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் நிகழ்வு ஆரம்பத்தில் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், பிரதான நிகழ்வு மேடையில் வைத்து பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டு, இறுதியில் கழகத்திற்கு மாநகரசபையின் உயர் கௌரவமாக நினைவுக் கேடயமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.மேற்படி நிகழ்வில் மாநகர குழுக்களின் தலைவர்கள், விளையாட்டுக்குழு உறுப்பினர்கள், மாநகரசபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர், நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement