2026 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ போட்டி கடந்த 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கிளிநொச்சி உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
வட மாகாணத்தின் பல்வேறு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட தண்டுவான் மகாவித்தியாலய மாணவிகள் அணி சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளது.
பெண்கள் பிரிவில் போட்டியிட்ட தண்டுவான் மகாவித்தியாலய மாணவிகள் 5 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெண்கள் தைக்வொண்டோ போட்டியில் முதலிடத்தைப் பெற்று, முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் துணுக்காய் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இச்சாதனையை நிகழ்த்திய மாணவிகளுக்கும், அவர்களை வழிநடத்திய பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
வடமாகாண தைக்வொண்டோ போட்டியில் முல்லைத்தீவு தண்டுவான் மகாவித்தியாலய மாணவிகள் அணி முதலிடம் 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ போட்டி கடந்த 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கிளிநொச்சி உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.வட மாகாணத்தின் பல்வேறு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட தண்டுவான் மகாவித்தியாலய மாணவிகள் அணி சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளது.பெண்கள் பிரிவில் போட்டியிட்ட தண்டுவான் மகாவித்தியாலய மாணவிகள் 5 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ளனர்.இந்த வெற்றியின் மூலம் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெண்கள் தைக்வொண்டோ போட்டியில் முதலிடத்தைப் பெற்று, முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் துணுக்காய் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.இச்சாதனையை நிகழ்த்திய மாணவிகளுக்கும், அவர்களை வழிநடத்திய பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.