படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினமான ஞாயிற்றுக்கிழமை(31) கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு ஊடகப் பயிற்சி நெறி ஒன்று மட்டக்களப்பில் அமைந்துள்ள ஊடக வள கற்கைகள் நிலையத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு செய்தி எழுதுதல், ஊடக அறம், போலிச் செய்திகளை கண்டறிதல், சைபர் பாதுகாப்பு, உள்ளிட்ட பல விடயங்கள் தொர்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர்களால் விளக்கமளிக்கப்பட்டன.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்த்த 30 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் இறுதியில் காலம்சென்ற ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அறிவித்து, சுடர் ஏற்றி, அஞ்சலியும் செலுத்தப்பட்டன.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத், மற்றும் ஊடகவியலார்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டகளப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினமான ஞாயிற்றுக்கிழமை(31) கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு ஊடகப் பயிற்சி நெறி ஒன்று மட்டக்களப்பில் அமைந்துள்ள ஊடக வள கற்கைகள் நிலையத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில் நடைபெற்றது.இதன்போது கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு செய்தி எழுதுதல், ஊடக அறம், போலிச் செய்திகளை கண்டறிதல், சைபர் பாதுகாப்பு, உள்ளிட்ட பல விடயங்கள் தொர்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர்களால் விளக்கமளிக்கப்பட்டன.இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்த்த 30 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர். இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.இந்நிலையில் இறுதியில் காலம்சென்ற ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அறிவித்து, சுடர் ஏற்றி, அஞ்சலியும் செலுத்தப்பட்டன.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத், மற்றும் ஊடகவியலார்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.