மோசமான காலநிலை காரணமாக ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்வத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கொக்வத்த, ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கத்திற்குள்ளான இரு பெண்களும் அப்பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்கியிருந்த விடுதி மீது மின்னல் தாக்கியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இருவரும் உடனடியாக மீபே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விடுதி மீது மின்னல் தாக்குதல் - ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் பலி மோசமான காலநிலை காரணமாக ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்வத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவத்தில் கொக்வத்த, ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.மின்னல் தாக்கத்திற்குள்ளான இரு பெண்களும் அப்பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த விடுதி மீது மின்னல் தாக்கியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பாதிக்கப்பட்ட இருவரும் உடனடியாக மீபே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.