அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டே இருக்கும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய முக்கிய நிபந்தனைகளாக:
கடற்படை முற்றுகையை நீக்குதல்
ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தல்
ஈரான் மீதான எண்ணெய் தடைகளை நீக்குதல்
அனைத்து முனைகளிலும் அச்சுறுத்தல்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துதல்
ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற உறுதிமொழிகளை செயல்படுத்துதல்
ஆகியவற்றை காலிபாஃப் குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்கா தனது உறுதிமொழிகளை செயல்படுத்தும் வரை ஜலசந்தி திறக்கப்படாது” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருப்பது, உலகளாவிய எரிபொருள் விநியோகம், கச்சா எண்ணெய் விலை மற்றும் சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஈரான் அமெரிக்காவுக்கு வைத்த அதிரடி நிபந்தனைகள் அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டே இருக்கும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய முக்கிய நிபந்தனைகளாக:கடற்படை முற்றுகையை நீக்குதல்ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தல்ஈரான் மீதான எண்ணெய் தடைகளை நீக்குதல்அனைத்து முனைகளிலும் அச்சுறுத்தல்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துதல்ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற உறுதிமொழிகளை செயல்படுத்துதல்ஆகியவற்றை காலிபாஃப் குறிப்பிட்டுள்ளார்.“அமெரிக்கா தனது உறுதிமொழிகளை செயல்படுத்தும் வரை ஜலசந்தி திறக்கப்படாது” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருப்பது, உலகளாவிய எரிபொருள் விநியோகம், கச்சா எண்ணெய் விலை மற்றும் சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.