• Nov 26 2026

இந்திய கடலோரக் காவல் படைக் கப்பல் ‘சுஜய்’ திருகோணமலைக்கு விஜயம்

Ziya / Nov 25th 2026, 11:53 am
image

இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ‘சுஜய்’ (Sujay) எனும் சமர்த் (Samarth) வகை கடலோர ரோந்துக் கப்பல், 2026 நவம்பர் இன்று (23)ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.


இந்திய மற்றும் இலங்கை தேசிய மாணவர் படையினரால் (National Cadet Corps) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச சைக்கிள் பயணத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதற்கும், செயல்பாட்டு இடைநிறுத்தப் பணிகளுக்காகவும் (Operational Turnaround – OTR) வருகை தந்துள்ள இக்கப்பல், நவம்பர் 25ஆம் திகதி வரை திருகோணமலையில் தரித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து, அதன் கட்டளை அதிகாரியான DIG விவேக் டோக்ரா (DIG Vivek Dogra), கிழக்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் பி.வி. பெர்டினாண்டுஸ் (Rear Admiral PV Ferdinandusz) மற்றும் இலங்கை கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியப் பணிப்பாளர் கமாண்டர் ஐ.பி. விஜேசிங்க (Commander IP Wijesinghe) ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார்.


அதனைத் தொடர்ந்து, இலங்கை கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவான் ரூபசேன (Rear Admiral Ruwan Rupasena) கப்பலுக்கு விஜயம் செய்து, அங்கு பணியாற்றும் இந்திய கடலோரக் காவல் படையினருடன் கலந்துரையாடினார்.


இதன்போது, இந்தியக் கப்பலின் பணியாளர்கள் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல் படையினருடன் தொழில்சார் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த பரிமாற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.


மேலும், கடல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை நடைமுறையில் கையாளுதல் மற்றும் அவற்றைச் செயல்படுத்துதல் தொடர்பில் இலங்கை கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிகளையும் இந்தியக் கப்பலின் பணியாளர்கள் வழங்கவுள்ளனர்.


 இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைக் கப்பல்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் இவ்வாறான விஜயங்கள், இரு நாடுகளினதும் கடல்சார் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.


இந்தியாவின் ‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கை மற்றும் ‘பிராந்தியங்கள் முழுவதிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்’ (MAHASAGAR) என்ற கொள்கைகளுக்கு அமைவாக இவ்வாறான விஜயங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கடலோரக் காவல் படைக் கப்பல் ‘சுஜய்’ திருகோணமலைக்கு விஜயம் இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ‘சுஜய்’ (Sujay) எனும் சமர்த் (Samarth) வகை கடலோர ரோந்துக் கப்பல், 2026 நவம்பர் இன்று (23)ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இந்திய மற்றும் இலங்கை தேசிய மாணவர் படையினரால் (National Cadet Corps) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச சைக்கிள் பயணத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதற்கும், செயல்பாட்டு இடைநிறுத்தப் பணிகளுக்காகவும் (Operational Turnaround – OTR) வருகை தந்துள்ள இக்கப்பல், நவம்பர் 25ஆம் திகதி வரை திருகோணமலையில் தரித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து, அதன் கட்டளை அதிகாரியான DIG விவேக் டோக்ரா (DIG Vivek Dogra), கிழக்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் பி.வி. பெர்டினாண்டுஸ் (Rear Admiral PV Ferdinandusz) மற்றும் இலங்கை கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியப் பணிப்பாளர் கமாண்டர் ஐ.பி. விஜேசிங்க (Commander IP Wijesinghe) ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார்.அதனைத் தொடர்ந்து, இலங்கை கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவான் ரூபசேன (Rear Admiral Ruwan Rupasena) கப்பலுக்கு விஜயம் செய்து, அங்கு பணியாற்றும் இந்திய கடலோரக் காவல் படையினருடன் கலந்துரையாடினார்.இதன்போது, இந்தியக் கப்பலின் பணியாளர்கள் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல் படையினருடன் தொழில்சார் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த பரிமாற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.மேலும், கடல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை நடைமுறையில் கையாளுதல் மற்றும் அவற்றைச் செயல்படுத்துதல் தொடர்பில் இலங்கை கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிகளையும் இந்தியக் கப்பலின் பணியாளர்கள் வழங்கவுள்ளனர். இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைக் கப்பல்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் இவ்வாறான விஜயங்கள், இரு நாடுகளினதும் கடல்சார் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.இந்தியாவின் ‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கை மற்றும் ‘பிராந்தியங்கள் முழுவதிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்’ (MAHASAGAR) என்ற கொள்கைகளுக்கு அமைவாக இவ்வாறான விஜயங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement