ஈரானியப் போர் வீரர்களுக்கு இந்தியா செய்தது கேவலமான செயல். சின்ன நாடாக இருந்தாலும் இந்த கேவலமான வேலைகளை நாங்கள் செய்ய மாட்டோம். இது எங்கள் நாட்டுக்கு இழைக்க வந்த சதி என்று பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது எங்கள் நாட்டுக்கு இழைக்க வந்த ஒரு விடயம். இந்தியாவின் ஒரு யுத்தப் பயிற்சியாளர்கள் 18ஆம் ஆண்டிலிருந்து வந்திருந்தார்கள். உலகத்திலுள்ள அனைவரும் வந்திருந்தார்கள்.
ஆனால் செய்த இந்த கேவலமான செயல் எமது நாட்டைப் பகிரங்கப்படுத்துவதற்காக செய்த செயல்.
அந்த நாட்டு மக்கள் அவர்களை வரவழைத்து அவர்களது பயிற்சிகளை வழங்குவதாககக் கூறிக் கொண்டு ஏனைய நாட்டு மக்கள் வெளியே செல்லும் போது அவர்கள் எங்கே செல்வது.
அவர்கள் தானே அவர்களை அழைத்து உள்ளே எடுத்தார்கள். அவர்களை வெளியேற்றுங்கள் அவ்வாறு வெளியேற்றுவதன் காரணமாகத் தான் எமது பிரதேசத்தில் அது இழுபட்டு வந்தது.
நாங்கள் சின்ன நாடாக இருந்தாலும் கூட இந்த மாதிரியான வேலைகளைச் செய்ய மாட்டோம். நாங்கள் அவர்களைக் கொண்டு வந்து கொன்ற மாதிரித் தான் காணப்படுகின்றது. அசாதாரணமான நிலைமை காணப்படுகின்றது என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஈரானிய போர் வீரர்களுக்கு இந்தியா செய்தது நாய் வேலை; இது எங்கள் நாட்டுக்கு இழைக்க வந்த சதி ஈரானியப் போர் வீரர்களுக்கு இந்தியா செய்தது கேவலமான செயல். சின்ன நாடாக இருந்தாலும் இந்த கேவலமான வேலைகளை நாங்கள் செய்ய மாட்டோம். இது எங்கள் நாட்டுக்கு இழைக்க வந்த சதி என்று பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது எங்கள் நாட்டுக்கு இழைக்க வந்த ஒரு விடயம். இந்தியாவின் ஒரு யுத்தப் பயிற்சியாளர்கள் 18ஆம் ஆண்டிலிருந்து வந்திருந்தார்கள். உலகத்திலுள்ள அனைவரும் வந்திருந்தார்கள். ஆனால் செய்த இந்த கேவலமான செயல் எமது நாட்டைப் பகிரங்கப்படுத்துவதற்காக செய்த செயல். அந்த நாட்டு மக்கள் அவர்களை வரவழைத்து அவர்களது பயிற்சிகளை வழங்குவதாககக் கூறிக் கொண்டு ஏனைய நாட்டு மக்கள் வெளியே செல்லும் போது அவர்கள் எங்கே செல்வது. அவர்கள் தானே அவர்களை அழைத்து உள்ளே எடுத்தார்கள். அவர்களை வெளியேற்றுங்கள் அவ்வாறு வெளியேற்றுவதன் காரணமாகத் தான் எமது பிரதேசத்தில் அது இழுபட்டு வந்தது. நாங்கள் சின்ன நாடாக இருந்தாலும் கூட இந்த மாதிரியான வேலைகளைச் செய்ய மாட்டோம். நாங்கள் அவர்களைக் கொண்டு வந்து கொன்ற மாதிரித் தான் காணப்படுகின்றது. அசாதாரணமான நிலைமை காணப்படுகின்றது என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.