• Aug 04 2026

மண்டைதீவு கடற்பரப்பில் 3,111 கடல் அட்டைகள் கைப்பற்றல் – இருவர் கைது

Chithra / Aug 4th 2026, 10:42 am
image


யாழ்ப்பாணம் - மண்டைதீவு கடற்பரப்பில் முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 3 ஆயிரத்து 111 கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


மண்டைதீவு கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (03) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.


இதன்போது, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட கடல் அட்டைகளுடன் அவற்றை ஏற்றிச் சென்ற சிறிய கன்டர் வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


பின்னர் சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட 3,111 கடல் அட்டைகள் 11 இலட்சத்து 19 ஆயிரத்து 960 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மண்டைதீவு கடற்பரப்பில் 3,111 கடல் அட்டைகள் கைப்பற்றல் – இருவர் கைது யாழ்ப்பாணம் - மண்டைதீவு கடற்பரப்பில் முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 3 ஆயிரத்து 111 கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்டைதீவு கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (03) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.இதன்போது, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட கடல் அட்டைகளுடன் அவற்றை ஏற்றிச் சென்ற சிறிய கன்டர் வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.பின்னர் சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட 3,111 கடல் அட்டைகள் 11 இலட்சத்து 19 ஆயிரத்து 960 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement