• Aug 04 2026

விஜய், த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு - உதயநிதி ஸ்டாலின் கைது!

Chithra / Aug 4th 2026, 12:15 pm
image


தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (04) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.


காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசைக் கண்டித்து, திமுக சார்பில் நேற்று (03) தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதன்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தவெக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டனர்.


இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்காக இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் முன்பாக அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.


திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருடன் பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாகவே பேசியதாகத் தெரிவித்தார்.


“விவசாயிகளை ஏமாற்றும் தவெக அரசையும், முதல்வர் விஜய்யையும் கண்டித்து 22 நிமிடங்கள் பேசினேன். அரசு விவசாயிகளை எவ்வாறு ஏமாற்றுகிறது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மேகேதாட்டுவுக்கு எதிராக குரல் கொடுக்கத் துணிவில்லாத அரசாக உள்ளது என்றுதான் கூறினேன்” என அவர் குறிப்பிட்டார்.


மேலும், “நான் பேசாத கருத்துக்களை பேசியதாக பொய்ப் பிரச்சாரம் செய்து, பொய் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்துள்ளனர். இதற்கெல்லாம் பயப்படமாட்டேன். என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்.சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


உதயநிதியை கைது செய்து அழைத்து செல்லும் வாகனம் முன்பு மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கண்டன முழக்கமிட்டனர்.


கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை பொலிஸார் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

விஜய், த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு - உதயநிதி ஸ்டாலின் கைது தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (04) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசைக் கண்டித்து, திமுக சார்பில் நேற்று (03) தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதன்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தவெக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டனர்.இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்காக இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் முன்பாக அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருடன் பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாகவே பேசியதாகத் தெரிவித்தார்.“விவசாயிகளை ஏமாற்றும் தவெக அரசையும், முதல்வர் விஜய்யையும் கண்டித்து 22 நிமிடங்கள் பேசினேன். அரசு விவசாயிகளை எவ்வாறு ஏமாற்றுகிறது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மேகேதாட்டுவுக்கு எதிராக குரல் கொடுக்கத் துணிவில்லாத அரசாக உள்ளது என்றுதான் கூறினேன்” என அவர் குறிப்பிட்டார்.மேலும், “நான் பேசாத கருத்துக்களை பேசியதாக பொய்ப் பிரச்சாரம் செய்து, பொய் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்துள்ளனர். இதற்கெல்லாம் பயப்படமாட்டேன். என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்.சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.உதயநிதியை கைது செய்து அழைத்து செல்லும் வாகனம் முன்பு மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கண்டன முழக்கமிட்டனர்.கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை பொலிஸார் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement