பிரித்தானியாவின் சிரென்செஸ்டர் நகரில் பிறந்த கெத்ரின் (Cathryn), கிளிநொச்சியிலிருந்து மாத்தறை வரை 500 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை 4 நாட்களில், அதாவது 110 மணிநேரத்திற்குள் ஓடிக் கடந்து புதிய கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனது ஓட்டப்பயணத்தை ஆரம்பித்த கெத்ரின், நாளை 19ஆம் திகதி சனிக்கிழமை மாத்தறையைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளார்.
இந்த குறிப்பிட்ட பிரிவில் இதுவரை கின்னஸ் உலக சாதனை எதுவும் நிலைநாட்டப்படாத நிலையில், புதிய சாதனையை உருவாக்கும் நோக்கில் அவர் இந்த சவாலான பயணத்தை முன்னெடுத்து வருகின்றார்.
இலங்கையில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதத்தைத் தவிர்ப்பதற்காக, கெத்ரின் இரவு நேரங்களிலும் தொடர்ச்சியாக ஓடி வருகின்றார். பகல் நேரங்களில் மிகக் குறுகிய இடைவெளிகளில் மட்டுமே ஓய்வெடுத்து, நாளொன்றுக்கு 100 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை கடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது பயணத்தின் போது யானைகள், பாம்புகள், கால்நடைகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பை வழங்குவதற்காக சிறப்பு பாதுகாப்புக் குழுவொன்றும் அவருடன் வாகனத்தில் பின்தொடர்கிறது.
அத்துடன், ஓட்டப்பயணத்தின்போது தேவையான உணவு மற்றும் நீர்ச்சத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவரது சாதனை முயற்சியை ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேரலையாகக் கண்காணிக்கும் வகையில் Garmin Tracker மூலம் அவரது தற்போதைய இருப்பிடம் மற்றும் பயண முன்னேற்றம் பகிரப்பட்டு வருகின்றது.
கின்னஸ் உலக சாதனை முயற்சிக்கு அப்பால், இலங்கையில் ஆதரவற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக செயற்படும் ‘Their Future Today’ தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டுவதும் கெத்ரினின் முக்கிய மனிதநேய நோக்கமாக அமைந்துள்ளது.
110 மணிநேரத்தில் 500 கி.மீ. ஓட்டம் இலங்கையில் கின்னஸ் சாதனை முயற்சியில் கெத்ரின் பிரித்தானியாவின் சிரென்செஸ்டர் நகரில் பிறந்த கெத்ரின் (Cathryn), கிளிநொச்சியிலிருந்து மாத்தறை வரை 500 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை 4 நாட்களில், அதாவது 110 மணிநேரத்திற்குள் ஓடிக் கடந்து புதிய கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனது ஓட்டப்பயணத்தை ஆரம்பித்த கெத்ரின், நாளை 19ஆம் திகதி சனிக்கிழமை மாத்தறையைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளார்.இந்த குறிப்பிட்ட பிரிவில் இதுவரை கின்னஸ் உலக சாதனை எதுவும் நிலைநாட்டப்படாத நிலையில், புதிய சாதனையை உருவாக்கும் நோக்கில் அவர் இந்த சவாலான பயணத்தை முன்னெடுத்து வருகின்றார்.இலங்கையில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதத்தைத் தவிர்ப்பதற்காக, கெத்ரின் இரவு நேரங்களிலும் தொடர்ச்சியாக ஓடி வருகின்றார். பகல் நேரங்களில் மிகக் குறுகிய இடைவெளிகளில் மட்டுமே ஓய்வெடுத்து, நாளொன்றுக்கு 100 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை கடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அவரது பயணத்தின் போது யானைகள், பாம்புகள், கால்நடைகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பை வழங்குவதற்காக சிறப்பு பாதுகாப்புக் குழுவொன்றும் அவருடன் வாகனத்தில் பின்தொடர்கிறது.அத்துடன், ஓட்டப்பயணத்தின்போது தேவையான உணவு மற்றும் நீர்ச்சத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அவரது சாதனை முயற்சியை ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேரலையாகக் கண்காணிக்கும் வகையில் Garmin Tracker மூலம் அவரது தற்போதைய இருப்பிடம் மற்றும் பயண முன்னேற்றம் பகிரப்பட்டு வருகின்றது.கின்னஸ் உலக சாதனை முயற்சிக்கு அப்பால், இலங்கையில் ஆதரவற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக செயற்படும் ‘Their Future Today’ தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டுவதும் கெத்ரினின் முக்கிய மனிதநேய நோக்கமாக அமைந்துள்ளது.