முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளில் CT மற்றும் MRI ஸ்கேன் இயந்திரங்கள் இல்லாததால் நோயாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு காணுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (04.08.2026) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு CT ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் இதுவரை அந்த வசதி ஏற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
CT ஸ்கேன் வசதி இல்லாத காரணத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான நோயாளர்கள், வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்ட மருத்துவமனைகளுக்கு அதிக சிரமங்களுக்கு மத்தியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்கும் CT ஸ்கேன் வசதியை விரைவாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு CT இயந்திரம் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் புதிய மருத்துவ விடுதி வளாக கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் CT மற்றும் MRI உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் ஆண்டுக்கான மருத்துவ உபகரணப் பட்டியல் தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அவசியமான உபகரணங்களை ஒரே கட்டமாக பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, மன்னார் மருத்துவமனைகளுக்கு CT, MRI இயந்திரங்கள்: சுகாதார அமைச்சர் உறுதி முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளில் CT மற்றும் MRI ஸ்கேன் இயந்திரங்கள் இல்லாததால் நோயாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு காணுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று (04.08.2026) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு CT ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் இதுவரை அந்த வசதி ஏற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.CT ஸ்கேன் வசதி இல்லாத காரணத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான நோயாளர்கள், வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்ட மருத்துவமனைகளுக்கு அதிக சிரமங்களுக்கு மத்தியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.எனவே, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்கும் CT ஸ்கேன் வசதியை விரைவாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு CT இயந்திரம் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் புதிய மருத்துவ விடுதி வளாக கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் CT மற்றும் MRI உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், எதிர்வரும் ஆண்டுக்கான மருத்துவ உபகரணப் பட்டியல் தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அவசியமான உபகரணங்களை ஒரே கட்டமாக பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.