ஹம்பந்தொட்டை போதனா வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற காட்டுயானை தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஹம்பந்தொட்டை போதனா வைத்தியசாலையின் உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர் மேலும் ஒருவருடன் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதிக்கு சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக காட்டுயானை தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதன்போது அவருடன் சென்ற மற்றைய நபர் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
யானை தாக்குதலில் காயமடைந்த நபர் உடனடியாக ஹம்பந்தொட்டை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பந்தொட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
ஊழியர் மீது யானை தாக்குதல்; ஹம்பந்தொட்டை வைத்தியசாலையில் பதற்றம் ஹம்பந்தொட்டை போதனா வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற காட்டுயானை தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஹம்பந்தொட்டை போதனா வைத்தியசாலையின் உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.குறித்த நபர் மேலும் ஒருவருடன் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதிக்கு சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக காட்டுயானை தாக்குதல் மேற்கொண்டுள்ளது.இதன்போது அவருடன் சென்ற மற்றைய நபர் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.யானை தாக்குதலில் காயமடைந்த நபர் உடனடியாக ஹம்பந்தொட்டை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பந்தொட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.