நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 130 ரூபாய் வரை உயர்த்த முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் விலைக்கட்டுப்பாட்டுக் குழுவிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், அண்மைய இரண்டு சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலை மொத்தமாக 36 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கடந்த முறையில் பெட்ரோல் விலை 12 ரூபாயால் அதிகரித்தபோதும், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடாது என்பதற்காக கட்டணத் திருத்தம் கோரவில்லை. ஆனால் இம்முறை 24 ரூபாய் போன்ற அதிகளவிலான உயர்வு ஏற்பட்டுள்ளதால், பழைய கட்டணங்களில் சேவையை தொடர்ந்து வழங்குவது சிரமமாகியுள்ளது.
மேலும், எரிபொருள் விலைக்கு மேலதிகமாக முச்சக்கர வண்டிகளுக்குத் தேவையான கிரீஸ், இன்ஜின் ஆயில் உள்ளிட்ட வழுவூட்டிகள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலைகளும் வேகமாக அதிகரித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், ஒட்டுமொத்த முச்சக்கர வண்டித் தொழில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் தங்களைப் போன்ற சிறு தொழிலதிபர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களது பிரச்சினைகளுக்கு போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
IMF மூலம் இடி விழும்போது, எங்களை வெளியில் வீசப்படும் இரும்புத் துண்டுகளைப் போலத்தான் இந்த அரசாங்கம் கருதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை உயர்வின் தாக்கம்; முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க முடிவு நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 130 ரூபாய் வரை உயர்த்த முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த முன்மொழிவு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் விலைக்கட்டுப்பாட்டுக் குழுவிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், அண்மைய இரண்டு சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலை மொத்தமாக 36 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.கடந்த முறையில் பெட்ரோல் விலை 12 ரூபாயால் அதிகரித்தபோதும், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடாது என்பதற்காக கட்டணத் திருத்தம் கோரவில்லை. ஆனால் இம்முறை 24 ரூபாய் போன்ற அதிகளவிலான உயர்வு ஏற்பட்டுள்ளதால், பழைய கட்டணங்களில் சேவையை தொடர்ந்து வழங்குவது சிரமமாகியுள்ளது.மேலும், எரிபொருள் விலைக்கு மேலதிகமாக முச்சக்கர வண்டிகளுக்குத் தேவையான கிரீஸ், இன்ஜின் ஆயில் உள்ளிட்ட வழுவூட்டிகள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலைகளும் வேகமாக அதிகரித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், ஒட்டுமொத்த முச்சக்கர வண்டித் தொழில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.அதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் தங்களைப் போன்ற சிறு தொழிலதிபர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களது பிரச்சினைகளுக்கு போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.IMF மூலம் இடி விழும்போது, எங்களை வெளியில் வீசப்படும் இரும்புத் துண்டுகளைப் போலத்தான் இந்த அரசாங்கம் கருதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.