• Jun 27 2026

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை - ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Chithra / Jun 26th 2026, 1:45 pm
image


இலங்கையில் இன்று (26) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதன்படி, நேற்று (25) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 3,000 ரூபாய் அதிகரித்து 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.


அதேபோன்று, நேற்று 346,000 ரூபாயாக இருந்த 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை, 2,700 ரூபாய் உயர்ந்து இன்று 348,700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,587 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதனிடையே, இலங்கை மத்திய வங்கி இன்று (26) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 341.87 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.


நேற்று (25) அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 342.03 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அது சற்றுக் குறைந்துள்ளதால் ரூபாயின் பெறுமதியில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


மேலும், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 332.22 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை - ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் இலங்கையில் இன்று (26) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, நேற்று (25) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 3,000 ரூபாய் அதிகரித்து 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோன்று, நேற்று 346,000 ரூபாயாக இருந்த 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை, 2,700 ரூபாய் உயர்ந்து இன்று 348,700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,587 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இதனிடையே, இலங்கை மத்திய வங்கி இன்று (26) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 341.87 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.நேற்று (25) அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 342.03 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அது சற்றுக் குறைந்துள்ளதால் ரூபாயின் பெறுமதியில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.மேலும், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 332.22 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement