கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் நேற்று இரவு (31) கார் தன்சல் வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் உயிரிழந்த 06 பேரில் சிலரின் விவரங்கள் வெளியாகியுள்ளன
சம்பவத்தில் 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்த நிலையில் ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில், பிலியந்தலை, வேவல, பள்ளி வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய பி.பி.இந்திராணி, இந்திராணியின் மகள் 35 வயதுடைய நவிஷா நிலக்ஷி, இந்திராணியின் மருமகன் (மகளின் கணவர்) 38 வயதுடைய லசிக பிரியங்கர நாணயக்கார, இந்திராணியின் சகோதரரின் மகளான 15 வயதுடைய சிறுமி (உறவினர் முறை தங்கை) ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அவிசாவளைப் பகுதியில் வசித்து வந்த நவிஷா மற்றும் அவரது கணவர் லசிக ஆகியோர், கடந்த சனிக்கிழமை பிலியந்தலையில் உள்ள தங்களது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
நேற்று அவர்களை மீண்டும் அவிசாவளையில் உள்ள வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் கொண்டு போய் விடுவதற்காக இந்திராணியும் அவரது கணவரும் புறப்பட்டுள்ளனர்.
அவிசாவளை நோக்கிச் செல்லும் வழியில் வீதியோரத்தில் காணப்பட்ட 'ரொட்டித் தானசாலை' ஒன்றில் ரொட்டி வாங்குவதற்காக அவர்கள் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு வரிசையில் நின்றுள்ளனர்.
இந்த விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கரவண்டியை ஓட்டி வந்த இந்திராணியின் கணவர் (நவிஷாவின் தந்தை) மற்றும் நவிஷாவின் மூத்த பிள்ளை ஆகிய இருவரும் முச்சக்கரவண்டிக்குள்ளேயே அமர்ந்திருந்ததால் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
எனினும், உயிரிழந்த நவிஷா, அவரது கணவர் லசிக, தாய் இந்திராணி மற்றும் உறவினர் முறை தங்கை ஆகியோருடன் வரிசையில் நின்றுகொண்டிருந்த போதே இந்த கொடூர விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் பாதுக்க துன்னனா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
இதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தினை ஏற்படுத்திய பிறகு வாடகைக் கார் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்ற நிலையில், விரைந்து செயல்பட்ட பொலிஸார் கொடகம சந்திப்பில் சாரதியை கைது செய்துள்ளனர்.
பிலியந்தலாவைச் சேர்ந்த 42 வயதான சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கார் சாரதி மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சாரதி ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை உலுக்கிய கோரம்; ஒரே குடும்பத்தில் நால்வர் பலி சாரதிக்கு விளக்கமறியல் கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் நேற்று இரவு (31) கார் தன்சல் வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் உயிரிழந்த 06 பேரில் சிலரின் விவரங்கள் வெளியாகியுள்ளன சம்பவத்தில் 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்த நிலையில் ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்களில், பிலியந்தலை, வேவல, பள்ளி வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய பி.பி.இந்திராணி, இந்திராணியின் மகள் 35 வயதுடைய நவிஷா நிலக்ஷி, இந்திராணியின் மருமகன் (மகளின் கணவர்) 38 வயதுடைய லசிக பிரியங்கர நாணயக்கார, இந்திராணியின் சகோதரரின் மகளான 15 வயதுடைய சிறுமி (உறவினர் முறை தங்கை) ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவிசாவளைப் பகுதியில் வசித்து வந்த நவிஷா மற்றும் அவரது கணவர் லசிக ஆகியோர், கடந்த சனிக்கிழமை பிலியந்தலையில் உள்ள தங்களது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.நேற்று அவர்களை மீண்டும் அவிசாவளையில் உள்ள வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் கொண்டு போய் விடுவதற்காக இந்திராணியும் அவரது கணவரும் புறப்பட்டுள்ளனர்.அவிசாவளை நோக்கிச் செல்லும் வழியில் வீதியோரத்தில் காணப்பட்ட 'ரொட்டித் தானசாலை' ஒன்றில் ரொட்டி வாங்குவதற்காக அவர்கள் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு வரிசையில் நின்றுள்ளனர்.இந்த விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கரவண்டியை ஓட்டி வந்த இந்திராணியின் கணவர் (நவிஷாவின் தந்தை) மற்றும் நவிஷாவின் மூத்த பிள்ளை ஆகிய இருவரும் முச்சக்கரவண்டிக்குள்ளேயே அமர்ந்திருந்ததால் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.எனினும், உயிரிழந்த நவிஷா, அவரது கணவர் லசிக, தாய் இந்திராணி மற்றும் உறவினர் முறை தங்கை ஆகியோருடன் வரிசையில் நின்றுகொண்டிருந்த போதே இந்த கொடூர விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர்களில் பாதுக்க துன்னனா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களும் உள்ளடங்கியுள்ளனர்.இதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.இந்த விபத்தினை ஏற்படுத்திய பிறகு வாடகைக் கார் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்ற நிலையில், விரைந்து செயல்பட்ட பொலிஸார் கொடகம சந்திப்பில் சாரதியை கைது செய்துள்ளனர்.பிலியந்தலாவைச் சேர்ந்த 42 வயதான சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கார் சாரதி மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் சாரதி ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.