நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் டெங்கு ஒழிப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நமது பாடசாலையின் சுகாதாரமான சூழலை உறுதி செய்யும் நோக்கில், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று 2026.06.13 அன்று காலை மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நாவலப்பிட்டி நகர சபை மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியவை இணைந்து, பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த சிரமதானப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்கள்:பாடசாலை அதிபர்: பெரியசாமி பிள்ளை லோகேஸ்வரன் ஜே.பி!
நாவலப்பிட்டி நகர சபை பிரதி தவிசாளர்: க. சுரேஸ்வரன் பொது சுகாதார வைத்திய அதிகாரி: சின்றி மோகன் , பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர்: திரு. ஹேமந்த்,அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, மாணவர்களின் நலன் கருதி பாடசாலைச் சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்தி, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை முற்றாக அகற்றினர்.
நாவலப்பிட்டி சுகாதார அத்தியட்சகர் பிரிவில் இருந்து விசேட டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க பாடசாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புகை அடிக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாடசாலை அதிபர் பெரியசாமி பிள்ளை லோகேஷ்வரன் ஜே.பி.தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் டெங்கு ஒழிப்பு நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் டெங்கு ஒழிப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. நமது பாடசாலையின் சுகாதாரமான சூழலை உறுதி செய்யும் நோக்கில், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று 2026.06.13 அன்று காலை மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நாவலப்பிட்டி நகர சபை மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியவை இணைந்து, பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த சிரமதானப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்கள்:பாடசாலை அதிபர்: பெரியசாமி பிள்ளை லோகேஸ்வரன் ஜே.பிநாவலப்பிட்டி நகர சபை பிரதி தவிசாளர்: க. சுரேஸ்வரன் பொது சுகாதார வைத்திய அதிகாரி: சின்றி மோகன் , பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர்: திரு. ஹேமந்த்,அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, மாணவர்களின் நலன் கருதி பாடசாலைச் சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்தி, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை முற்றாக அகற்றினர்.நாவலப்பிட்டி சுகாதார அத்தியட்சகர் பிரிவில் இருந்து விசேட டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க பாடசாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புகை அடிக்கப்பட்டது.நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாடசாலை அதிபர் பெரியசாமி பிள்ளை லோகேஷ்வரன் ஜே.பி.தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.