• Nov 06 2026

துறவி வேடத்தில் வீடு வீடாக வசூல்! மாலையில் செய்யும் காரியம்?

Chithra / Nov 2nd 2026, 7:55 am
image


நிக்கவெரட்டிய விகாரையொன்றின் துறவி எனக் கூறிக்கொண்டு, வீடு வீடாகச் சென்று பணத்தையும் பொருட்களையும் சேகரித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.


கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஆனால், நன்கொடையாகப் பெறப்படும் பொருட்களுக்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பில் விசாரணைகளில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.


குறித்த நபர், வீடுகளில் சேகரிக்கும் பொருட்களை மாலை நேரங்களில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து பணம் சம்பாதித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதையடுத்து, சந்தேகநபரைக் கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவியை கொஸ்கம பொலிஸார் கோரியுள்ளனர்.


அவர் தொடர்பான தகவல்கள் அல்லது நடமாட்டம் குறித்த விபரங்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 


துறவி வேடத்தில் வீடு வீடாக வசூல் மாலையில் செய்யும் காரியம் நிக்கவெரட்டிய விகாரையொன்றின் துறவி எனக் கூறிக்கொண்டு, வீடு வீடாகச் சென்று பணத்தையும் பொருட்களையும் சேகரித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.ஆனால், நன்கொடையாகப் பெறப்படும் பொருட்களுக்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பில் விசாரணைகளில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.குறித்த நபர், வீடுகளில் சேகரிக்கும் பொருட்களை மாலை நேரங்களில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து பணம் சம்பாதித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, சந்தேகநபரைக் கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவியை கொஸ்கம பொலிஸார் கோரியுள்ளனர்.அவர் தொடர்பான தகவல்கள் அல்லது நடமாட்டம் குறித்த விபரங்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement