• Aug 26 2026

எங்கள் பொருளாதாரத்தை பாதிக்கும் நிபந்தனை வேண்டாம்அமெரிக்காவுக்கு கனடா எச்சரிக்கை

Ziya / Aug 25th 2026, 3:04 pm
image

கனடா–அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், “சரியான மனப்பான்மையுடன்” பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவில் தயாரிக்கப்படும் கார்கள், லாரிகள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு 50% வரை புதிய சுங்கவரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளன.


கடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா செப்டம்பர் 8 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலடி சுங்கவரிகளை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. 


கார்னி, அமெரிக்காவின் புதிய நிபந்தனைகள் கனடாவின் பொருளாதார நலன்களுக்கு ஏற்றதாக இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.


எங்கள் பொருளாதாரத்தை பாதிக்கும் நிபந்தனை வேண்டாம்அமெரிக்காவுக்கு கனடா எச்சரிக்கை கனடா–அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், “சரியான மனப்பான்மையுடன்” பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவில் தயாரிக்கப்படும் கார்கள், லாரிகள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு 50% வரை புதிய சுங்கவரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளன.கடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா செப்டம்பர் 8 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலடி சுங்கவரிகளை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. கார்னி, அமெரிக்காவின் புதிய நிபந்தனைகள் கனடாவின் பொருளாதார நலன்களுக்கு ஏற்றதாக இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement