• Oct 30 2026

பொலிஸாரின் வாக்குமூலமே தண்டனைக்கு ஆதாரமாகுமா? இலங்கையின் புதிய சட்டத்தால் எழுந்த கேள்வி!

Chithra / Oct 29th 2026, 10:29 am
image


இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம், தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு, 


புதிய சட்டமூலத்தில் உள்ள சில ஏற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளுக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.


குறிப்பாக, போதிய நீதிமன்ற மேற்பார்வையின்றியும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரங்கள் இன்றியும் சந்தேகநபர்களை நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கு இந்தச் சட்டமூலம் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், பொலிஸாரால் பெறப்படும் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு அனுமதிக்கும் ஏற்பாடுகள், சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் எலென் பியர்சன் (Elaine Pearson), இத்தகைய சட்ட ஏற்பாடுகள் பொலிஸாரின் அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இந்தச் சட்டமூலம் தற்போதுள்ள வடிவிலேயே நிறைவேற்றப்பட்டால், கடந்த காலங்களில் நடைமுறையிலிருந்த கடுமையான சட்டங்களால் ஏற்பட்டதைப் போன்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

பொலிஸாரின் வாக்குமூலமே தண்டனைக்கு ஆதாரமாகுமா இலங்கையின் புதிய சட்டத்தால் எழுந்த கேள்வி இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம், தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு, புதிய சட்டமூலத்தில் உள்ள சில ஏற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளுக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.குறிப்பாக, போதிய நீதிமன்ற மேற்பார்வையின்றியும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரங்கள் இன்றியும் சந்தேகநபர்களை நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கு இந்தச் சட்டமூலம் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பொலிஸாரால் பெறப்படும் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு அனுமதிக்கும் ஏற்பாடுகள், சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் எலென் பியர்சன் (Elaine Pearson), இத்தகைய சட்ட ஏற்பாடுகள் பொலிஸாரின் அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்தச் சட்டமூலம் தற்போதுள்ள வடிவிலேயே நிறைவேற்றப்பட்டால், கடந்த காலங்களில் நடைமுறையிலிருந்த கடுமையான சட்டங்களால் ஏற்பட்டதைப் போன்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement