• May 06 2026

வெள்ள அனர்த்தத்தால் சேதமடைந்த பாலம்; இந்திய இராணுவத்தினரால் மீள அமைக்கும் பணிகள்!

shanu / Dec 8th 2025, 2:37 pm
image


இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பிரிவினர் வெள்ள அனர்த்தத்தால் சேதமடைந்த பாலங்களை கிளிநொச்சியில் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளனர்.


அந்த வகையில் பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினொராவது கிலோமீட்டரில் அமைந்திருந்த  வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த பாலத்தினை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளனர்.


இந்தியாவிலிருந்து வருகை தந்த இராணுவத்தினரின் பொறியியலாளர் உட்பட சுமார் 43 பேர் கொண்ட  குழுவினர் கிளிநொச்சி வருகை தந்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த பாலத்தினை புனரமைப்பு செய்து வருகிறார்கள்.


நாட்டைப் புரட்டிப் போட்ட டிட்வா புயலால் உச்சக்கட்ட பாதிப்புக்கள் ஏற்பட்ட நிலையில் அவற்றை சீர் செய்ய பல தரப்பினரும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெள்ள அனர்த்தத்தால் சேதமடைந்த பாலம்; இந்திய இராணுவத்தினரால் மீள அமைக்கும் பணிகள் இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பிரிவினர் வெள்ள அனர்த்தத்தால் சேதமடைந்த பாலங்களை கிளிநொச்சியில் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளனர்.அந்த வகையில் பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினொராவது கிலோமீட்டரில் அமைந்திருந்த  வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த பாலத்தினை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளனர்.இந்தியாவிலிருந்து வருகை தந்த இராணுவத்தினரின் பொறியியலாளர் உட்பட சுமார் 43 பேர் கொண்ட  குழுவினர் கிளிநொச்சி வருகை தந்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த பாலத்தினை புனரமைப்பு செய்து வருகிறார்கள்.நாட்டைப் புரட்டிப் போட்ட டிட்வா புயலால் உச்சக்கட்ட பாதிப்புக்கள் ஏற்பட்ட நிலையில் அவற்றை சீர் செய்ய பல தரப்பினரும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement