• May 19 2026

பசிலின் மல்வானை வீடு பல்கலைக்கு - உறுதியளித்த பிரதமர்!

shanu / May 18th 2026, 6:00 pm
image

பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததால் மல்வானை வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. 


பசில் ராஜபக்சவிற்கு சொந்தமானது எனக் கருதப்படும் மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழகத்திற்கு வழங்குமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வீட்டை கடந்த 14 ஆம் திகதி முற்றுகையிட்டனர். 


கடந்த 14 ஆம் திகதியிலிருந்து இன்று வரை மாணவர்கள் அங்கேயே தங்கியிருந்து சமைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அத்துடன் பசிலின் வீட்டை பல்கலை மாணவர்கள் தியேட்டராக கூட மாற்றியிருந்தனர். 


பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு குறித்த வீட்டை ஒப்படைக்கும் வரை வீட்டை விட்டு வெளியேற மாட்டோம் எனத் தெரிவித்து மாணவர்கள் அங்கு தங்கியிருந்தனர். 


இந்த நிலையில் குறித்தை வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 


இன்று (18) பிரதமருடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மாணவர் ஒன்றிய இணைப்பாளர் சசிந்து பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், காணியை கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதால், இந்த நேரத்தில் அந்த வளாகத்தில் இருந்து வெளியேறி செல்வதற்கு நாங்கள்  நடவடிக்கை எடுத்துள்ளோம். 


மல்வானை காணியை வரும் நாட்களில் கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார். நாங்கள் கோரிய விடயத்திற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து ஒரு பதில் கிடைத்துள்ளது. 


அந்தப் பதிலைத் தொடர்ந்து, இந்த நேரத்தில் மல்வானை காணியில் இருந்து வெளியேற நாங்கள் தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்தார். 

பசிலின் மல்வானை வீடு பல்கலைக்கு - உறுதியளித்த பிரதமர் பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததால் மல்வானை வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பசில் ராஜபக்சவிற்கு சொந்தமானது எனக் கருதப்படும் மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழகத்திற்கு வழங்குமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வீட்டை கடந்த 14 ஆம் திகதி முற்றுகையிட்டனர். கடந்த 14 ஆம் திகதியிலிருந்து இன்று வரை மாணவர்கள் அங்கேயே தங்கியிருந்து சமைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அத்துடன் பசிலின் வீட்டை பல்கலை மாணவர்கள் தியேட்டராக கூட மாற்றியிருந்தனர். பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு குறித்த வீட்டை ஒப்படைக்கும் வரை வீட்டை விட்டு வெளியேற மாட்டோம் எனத் தெரிவித்து மாணவர்கள் அங்கு தங்கியிருந்தனர். இந்த நிலையில் குறித்தை வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று (18) பிரதமருடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மாணவர் ஒன்றிய இணைப்பாளர் சசிந்து பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், காணியை கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதால், இந்த நேரத்தில் அந்த வளாகத்தில் இருந்து வெளியேறி செல்வதற்கு நாங்கள்  நடவடிக்கை எடுத்துள்ளோம். மல்வானை காணியை வரும் நாட்களில் கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார். நாங்கள் கோரிய விடயத்திற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து ஒரு பதில் கிடைத்துள்ளது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, இந்த நேரத்தில் மல்வானை காணியில் இருந்து வெளியேற நாங்கள் தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement