மதவாச்சி பகுதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அதன் உரிமையாளரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 9ஆம் திகதி, மதவாச்சியில் உள்ள சலூன் ஒன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர், அங்கு இருந்த உரிமையாளரிடம் பணம் கோரி தாக்குதல் நடத்தும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜூன் 10ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதுடைய மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கப்பம் பெறும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபருக்கும் வணிக நிலைய உரிமையாளருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (18) மதவாச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது மதவாச்சி பகுதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அதன் உரிமையாளரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஜூன் 9ஆம் திகதி, மதவாச்சியில் உள்ள சலூன் ஒன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர், அங்கு இருந்த உரிமையாளரிடம் பணம் கோரி தாக்குதல் நடத்தும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தன.இந்தச் சம்பவம் தொடர்பாக ஜூன் 10ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதுடைய மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் கப்பம் பெறும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபருக்கும் வணிக நிலைய உரிமையாளருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (18) மதவாச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.