கொழும்பு துறைமுக நகரில் (Port City) பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய மின்சார ட்ரோன் வானூர்திகள் தற்போது சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி குறித்த வானூர்திகளின் உத்தியோகபூர்வ செயல்விளக்கம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் பயணிகள் போக்குவரத்திற்காக நவீன வானூர்தித் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சீனாவைச் சேர்ந்த EHang Holdings நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் செங்குத்தாக மேலெழுந்து தரையிறங்கக்கூடிய (eVTOL) வானூர்தித் தொழில்நுட்பத்தில் குறித்த நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய முதலாவது மின்சார வானூர்தி ஏற்கனவே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத்துறை, சரக்குப் போக்குவரத்து, அவசர மருத்துவப் போக்குவரத்து மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கான விநியோக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
இதற்காக இலங்கையின் சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடல்களையும் முன்னெடுத்துள்ளன.
எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி நடைபெறவுள்ள செயல்விளக்கத்தின் போது, நகர்ப்புற வான்வழிப் போக்குவரத்தில் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதன் மூலம் இலங்கையின் போக்குவரத்துத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு வானில் நிகழப்போகும் அதிசயம் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள் கொழும்பு துறைமுக நகரில் (Port City) பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய மின்சார ட்ரோன் வானூர்திகள் தற்போது சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி குறித்த வானூர்திகளின் உத்தியோகபூர்வ செயல்விளக்கம் நடைபெறவுள்ளது.இலங்கையில் பயணிகள் போக்குவரத்திற்காக நவீன வானூர்தித் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.சீனாவைச் சேர்ந்த EHang Holdings நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் செங்குத்தாக மேலெழுந்து தரையிறங்கக்கூடிய (eVTOL) வானூர்தித் தொழில்நுட்பத்தில் குறித்த நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது.இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய முதலாவது மின்சார வானூர்தி ஏற்கனவே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்தத் தொழில்நுட்பத்தைப் பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத்துறை, சரக்குப் போக்குவரத்து, அவசர மருத்துவப் போக்குவரத்து மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கான விநியோக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.இதற்காக இலங்கையின் சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடல்களையும் முன்னெடுத்துள்ளன.எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி நடைபெறவுள்ள செயல்விளக்கத்தின் போது, நகர்ப்புற வான்வழிப் போக்குவரத்தில் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.இதன் மூலம் இலங்கையின் போக்குவரத்துத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.