• Apr 27 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே

Chithra / Mar 5th 2026, 6:43 pm
image

 

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்றமேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இத்தகைய பின்னணியிலேயே அவரை மூன்றாவது சந்தேக நபராக பெயரிட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியொருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் பிரதிவாதிகளாகப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பலரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே  அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்றமேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.இத்தகைய பின்னணியிலேயே அவரை மூன்றாவது சந்தேக நபராக பெயரிட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.இதேவேளை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியொருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் பிரதிவாதிகளாகப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பலரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement