இந்தியா - தமிழ்நாடு, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில், கொரோனா போன்ற புதுவித நோய் தலைமுடி வழியாகப் பரவுவதாகக் கூறி, மொட்டை அடித்தால் பணம் வழங்கப்படும் என மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
தாலுகா அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறிய குறித்த நபர், பெண்கள் மொட்டை அடித்தால் 15,000 ரூபா ஊக்கத்தொகையும், ஆண்களுக்கு 6,000 ரூபா வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தனது பேச்சை நம்ப வைப்பதற்காக, ஏற்கனவே சிலர் மொட்டை அடித்து பணம் பெற்றதாகக் கூறி, அதுதொடர்பான சில புகைப்படங்களையும் அவர் அனுப்பியுள்ளார்.
இதனை நம்பிய அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் மொட்டை அடித்துள்ளனர். மேலும் சிலரும் மொட்டை அடிக்கத் தயாராக இருந்துள்ளனர்.
இந்நிலையில், பணம் வழங்குவதாகக் கூறிய மர்ம நபரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது தொலைபேசி இலக்கம் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்தே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் பண மோசடிகள் தொடர்பாக அரசு மற்றும் பொலிஸார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
எனினும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தெரியாத நபர்களின் தொலைபேசி அழைப்புகளை நம்பி எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாமல், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மொட்டை அடித்தால் ரூ.15,000 மர்ம நபரின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்த பெண்கள் இந்தியா - தமிழ்நாடு, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில், கொரோனா போன்ற புதுவித நோய் தலைமுடி வழியாகப் பரவுவதாகக் கூறி, மொட்டை அடித்தால் பணம் வழங்கப்படும் என மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.தாலுகா அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறிய குறித்த நபர், பெண்கள் மொட்டை அடித்தால் 15,000 ரூபா ஊக்கத்தொகையும், ஆண்களுக்கு 6,000 ரூபா வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.தனது பேச்சை நம்ப வைப்பதற்காக, ஏற்கனவே சிலர் மொட்டை அடித்து பணம் பெற்றதாகக் கூறி, அதுதொடர்பான சில புகைப்படங்களையும் அவர் அனுப்பியுள்ளார்.இதனை நம்பிய அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் மொட்டை அடித்துள்ளனர். மேலும் சிலரும் மொட்டை அடிக்கத் தயாராக இருந்துள்ளனர்.இந்நிலையில், பணம் வழங்குவதாகக் கூறிய மர்ம நபரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது தொலைபேசி இலக்கம் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்தே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் பண மோசடிகள் தொடர்பாக அரசு மற்றும் பொலிஸார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனினும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, தெரியாத நபர்களின் தொலைபேசி அழைப்புகளை நம்பி எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாமல், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.