• Jul 29 2026

சாக்கடையில் கிடைத்த கோடிக்கணக்கான தங்கம்,வெள்ளி!

Ziya / Jul 29th 2026, 2:46 pm
image

சுவிட்சர்லாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கழிவுநீருடன் கலந்து செல்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.


சுவிட்சர்லாந்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டாட்சி நிறுவனமான Eawag மேற்கொண்ட ஆய்வில், நாட்டின் 64 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.


ஆய்வின் கணக்கீட்டின்படி, ஆண்டுதோறும் சுமார் 43 கிலோகிராம் தங்கமும், 3,000 கிலோகிராம் வெள்ளியும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வந்தடைகின்றன. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.


வீடுகளில் பயன்படுத்தப்படும் நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களில் இருந்து வெளியேறும் மிகச் சிறிய உலோகத் துகள்கள் கழிவுநீரில் கலந்து செல்லக்கூடும்.


அதேவேளை, சுவிட்சர்லாந்தின் ஜூரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடிகார உற்பத்தித் தொழிற்சாலைகளும் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன. இத்தொழில்களில் பயன்படுத்தப்படும் தங்கம், ருத்தேனியம், ரோடியம் உள்ளிட்ட உலோகங்களின் துகள்கள் கழிவுநீருடன் கலந்து சுத்திகரிப்பு நிலையங்களைச் சென்றடைகின்றன.


கழிவுநீரில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் அதை மீட்டெடுப்பது பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இல்லை.


காரணம், கழிவுநீரில் இருந்து தங்கம் மற்றும் பிற உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்கான செலவு, அவற்றின் மதிப்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.


ஆனால் சுவிட்சர்லாந்தின் டிசினோ பகுதியில் கழிவுநீர் சேற்றில் அதிக அளவு தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் செயல்படும் தங்க சுத்திகரிப்பு ஆலைகளால், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தங்கத்தை மீட்டெடுப்பது லாபகரமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


சுவிட்சர்லாந்து மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் கழிவுநீர் சேற்றில் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கலந்து செல்வதாக முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.


சாக்கடையில் கிடைத்த கோடிக்கணக்கான தங்கம்,வெள்ளி சுவிட்சர்லாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கழிவுநீருடன் கலந்து செல்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.சுவிட்சர்லாந்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டாட்சி நிறுவனமான Eawag மேற்கொண்ட ஆய்வில், நாட்டின் 64 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.ஆய்வின் கணக்கீட்டின்படி, ஆண்டுதோறும் சுமார் 43 கிலோகிராம் தங்கமும், 3,000 கிலோகிராம் வெள்ளியும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வந்தடைகின்றன. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.வீடுகளில் பயன்படுத்தப்படும் நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களில் இருந்து வெளியேறும் மிகச் சிறிய உலோகத் துகள்கள் கழிவுநீரில் கலந்து செல்லக்கூடும்.அதேவேளை, சுவிட்சர்லாந்தின் ஜூரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடிகார உற்பத்தித் தொழிற்சாலைகளும் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன. இத்தொழில்களில் பயன்படுத்தப்படும் தங்கம், ருத்தேனியம், ரோடியம் உள்ளிட்ட உலோகங்களின் துகள்கள் கழிவுநீருடன் கலந்து சுத்திகரிப்பு நிலையங்களைச் சென்றடைகின்றன.கழிவுநீரில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் அதை மீட்டெடுப்பது பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இல்லை.காரணம், கழிவுநீரில் இருந்து தங்கம் மற்றும் பிற உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்கான செலவு, அவற்றின் மதிப்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.ஆனால் சுவிட்சர்லாந்தின் டிசினோ பகுதியில் கழிவுநீர் சேற்றில் அதிக அளவு தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் செயல்படும் தங்க சுத்திகரிப்பு ஆலைகளால், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தங்கத்தை மீட்டெடுப்பது லாபகரமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்து மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் கழிவுநீர் சேற்றில் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கலந்து செல்வதாக முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement