இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஐயப்ப யாத்திரிகளுக்கான காப்புறுதி தொடர்பாக நீண்ட காலமாக நிலவி வந்த சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக புதிய திட்டம் குறித்த பேச்சுவார்த்தை சாதகமானதாக இருந்தது என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இக்கலந்துரையாடலின் போது யாத்திரிகர்களுக்கான காப்புறுதித் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை உடனடியாக முன்வைக்குமாறும் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்தின் ஊடாகச் செய்ய வேண்டிய அனைத்து விடயங்களையும் முன்னெடுக்க அமைச்சர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் சம்பந்தப்பட்ட உதவிகளை வழங்கப் புத்தசாசன அமைச்சு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஐயப்ப யாத்திரிகர்களுக்கு காத்திருக்கும் புதிய திட்டம் - நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.ஐயப்ப யாத்திரிகளுக்கான காப்புறுதி தொடர்பாக நீண்ட காலமாக நிலவி வந்த சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக புதிய திட்டம் குறித்த பேச்சுவார்த்தை சாதகமானதாக இருந்தது என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இக்கலந்துரையாடலின் போது யாத்திரிகர்களுக்கான காப்புறுதித் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை உடனடியாக முன்வைக்குமாறும் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்தின் ஊடாகச் செய்ய வேண்டிய அனைத்து விடயங்களையும் முன்னெடுக்க அமைச்சர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் சம்பந்தப்பட்ட உதவிகளை வழங்கப் புத்தசாசன அமைச்சு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.