• Apr 21 2026

Chithra / Nov 6th 2025, 9:04 am
image

 

ரிதிமாலியத்த - உராகொட்டுவ பகுதியில், அனுமதியின்றி புதையல் தோண்டிய 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று ரிதிமாலியத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள ரிதிமாலியத்த, மஹியங்கனை, அராவத்தை, ரிதிகஹா மற்றும் தெஹியத்தகண்டிய பகுதிகளை சேர்ந்த, 27 முதல் 67 வயதுக்குட்பட்டவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை பொகவந்தலாவ - தெரேசியாவத்த பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

புதையல் தோண்டிய 8 பேர் கைது  ரிதிமாலியத்த - உராகொட்டுவ பகுதியில், அனுமதியின்றி புதையல் தோண்டிய 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ரிதிமாலியத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேக நபர்கள ரிதிமாலியத்த, மஹியங்கனை, அராவத்தை, ரிதிகஹா மற்றும் தெஹியத்தகண்டிய பகுதிகளை சேர்ந்த, 27 முதல் 67 வயதுக்குட்பட்டவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதேவேளை பொகவந்தலாவ - தெரேசியாவத்த பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement