• Oct 21 2026

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவு: அஷ்ரஃப் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சாய்ந்தமருதில் ஏற்பாடுகள்

Aathira / Oct 20th 2026, 8:14 am
image

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் நடத்தப்படவுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்பான விசேட கலந்துரையாடல் சாய்ந்தமருதில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், திங்கட்கிழமை (19) இரவு சாய்ந்தமருது இளைஞர் காங்கிரஸ் காரியாலயத்தில், கட்சியின் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் அமைப்பாளரும் உயர் பீட உறுப்பினருமான எம். பாமி மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.

இதில், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம். முஷாரப், அம்பாறை மாவட்ட செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன், உயர் பீட உறுப்பினர் கலாநிதி முபீசால் அபூபக்கர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஹக்கானி மஜீத் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள், கிராம மட்ட இளைஞர் அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, சாய்ந்தமருது பிரதேசத்தில் குறித்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி நடத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், போட்டியைச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுப்பதற்காக, சாய்ந்தமருது பிரதேச இளைஞர்கள் மற்றும் துறைசார் நபர்களை உள்ளடக்கிய விசேட ஏற்பாட்டுக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவு: அஷ்ரஃப் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சாய்ந்தமருதில் ஏற்பாடுகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் நடத்தப்படவுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்பான விசேட கலந்துரையாடல் சாய்ந்தமருதில் நடைபெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடல், திங்கட்கிழமை (19) இரவு சாய்ந்தமருது இளைஞர் காங்கிரஸ் காரியாலயத்தில், கட்சியின் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் அமைப்பாளரும் உயர் பீட உறுப்பினருமான எம். பாமி மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.இதில், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம். முஷாரப், அம்பாறை மாவட்ட செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன், உயர் பீட உறுப்பினர் கலாநிதி முபீசால் அபூபக்கர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஹக்கானி மஜீத் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள், கிராம மட்ட இளைஞர் அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இதன்போது, சாய்ந்தமருது பிரதேசத்தில் குறித்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி நடத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.அத்துடன், போட்டியைச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுப்பதற்காக, சாய்ந்தமருது பிரதேச இளைஞர்கள் மற்றும் துறைசார் நபர்களை உள்ளடக்கிய விசேட ஏற்பாட்டுக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement