சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி, சட்டவிரோத முறையில் நாட்டில் தங்கியிருந்ததுடன் பல்வேறு சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் 6 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை சீனாவிற்கு அழைத்துச் செல்வதற்காக அந்நாட்டின் 11 பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இவர்கள் அனைவரும் நேற்று (04) இரவு 10.50 மணியளவில், சீன ஈஸ்டர்ன் விமான சேவைக்குச் சொந்தமான MU-714 என்ற சாதாரண பயணிகள் விமானம் மூலம் சீனாவிலுள்ள குன்மிங் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 சீனர்கள் நாடு கடத்தல் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி, சட்டவிரோத முறையில் நாட்டில் தங்கியிருந்ததுடன் பல்வேறு சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 6 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களை சீனாவிற்கு அழைத்துச் செல்வதற்காக அந்நாட்டின் 11 பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று (04) இரவு 10.50 மணியளவில், சீன ஈஸ்டர்ன் விமான சேவைக்குச் சொந்தமான MU-714 என்ற சாதாரண பயணிகள் விமானம் மூலம் சீனாவிலுள்ள குன்மிங் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.