ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான நினைவு பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தேக்கவத்தையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேழ 36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்றைய(19) தினம் வடக்கு கிழக்கு தழுவிய தியாகிகள் தின நிகழ்வு திருகோணமலையில் உள்ள தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் காலை அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது வடக்கு கிழக்கைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் வை. விக்கினேஸ்வரன் (கிருபா), ஏனைய மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். தீபம் ஏற்றப்பட்டு, உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
36வது தியாகிகள் தினம் வடக்கு கிழக்கில் அனுஸ்டிப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான நினைவு பேருரையும் நிகழ்த்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து தேக்கவத்தையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதேவேழ 36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்றைய(19) தினம் வடக்கு கிழக்கு தழுவிய தியாகிகள் தின நிகழ்வு திருகோணமலையில் உள்ள தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் காலை அனுஷ்டிக்கப்பட்டது.இதன்போது வடக்கு கிழக்கைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கட்சியின் பொதுச் செயலாளர் வை. விக்கினேஸ்வரன் (கிருபா), ஏனைய மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். தீபம் ஏற்றப்பட்டு, உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.