• Aug 01 2026

இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சா பறிமுதல் மூவர் கைது

dorin / Aug 1st 2026, 10:48 am
image

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் நேற்று (31) பறிமுதல் செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தவிருப்பதாக பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதுமடம் கடற்கரைப் பகுதியில் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். 

அப்போது, அந்தப் பகுதியில் வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா். அதில்146 மூட்டையில் 30 இலட்சம் இந்தியா ரூபா மதிப்பிலான 292 கிலோ கஞ்சா இருந்ததும், இவற்றை இலங்கைக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது. 


இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த பொலிஸார், அந்த லொறியில் பயணித்த ராமநாதபுரம் பெருங்குளத்தைச் சோ்ந்த செந்தில்வேலன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், சேகா் ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சா பறிமுதல் மூவர் கைது இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் நேற்று (31) பறிமுதல் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தவிருப்பதாக பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதுமடம் கடற்கரைப் பகுதியில் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா். அதில்146 மூட்டையில் 30 இலட்சம் இந்தியா ரூபா மதிப்பிலான 292 கிலோ கஞ்சா இருந்ததும், இவற்றை இலங்கைக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த பொலிஸார், அந்த லொறியில் பயணித்த ராமநாதபுரம் பெருங்குளத்தைச் சோ்ந்த செந்தில்வேலன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், சேகா் ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

Advertisement