• May 21 2026

22 மாவட்டங்கள் 'தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக' பிரகடனம்! வெளியான வர்த்தமானி

Chithra / Dec 3rd 2025, 8:59 am
image

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணங்களைப் பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 9 ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபனினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 'டித்வா' சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட 22 நிர்வாக மாவட்டங்கள் 'தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களாக'ப் பெயரிடப்பட்டுள்ளன.

அவை பின்வருமாறு:

அதன்படி கண்டி, நுவரெலியா, பதுளை, குருநாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அநுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா,  களுத்துறை ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன.

22 மாவட்டங்கள் 'தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக' பிரகடனம் வெளியான வர்த்தமானி நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணங்களைப் பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 9 ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபனினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, 'டித்வா' சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட 22 நிர்வாக மாவட்டங்கள் 'தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களாக'ப் பெயரிடப்பட்டுள்ளன.அவை பின்வருமாறு:அதன்படி கண்டி, நுவரெலியா, பதுளை, குருநாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அநுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா,  களுத்துறை ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement