• Jun 14 2026

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழப்பு - ஒருவர் கைது

Chithra / Jun 14th 2026, 2:22 pm
image

மொனராகலை மாவட்டத்தின் ஒக்கம்பிட்டிய, மாளிகாவில ஜோதியாமுன பிரதேசத்தில் விவசாய நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி  இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.


காட்டு விலங்குகளிடமிருந்து கரும்பு, பப்பாளி, வாழை மற்றும் நெல் பயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலி அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


மின்வேலியுடன் தொடர்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சுமார் 20 வயதுடைய, ஆறு அடி உயரமுள்ள ஆண் யானையும், ஒரு வயதுடைய நான்கு அடி உயரமுள்ள யானைக் குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த இரண்டு காட்டு யானைகளின் உடற்கூறாய்வு  பரிசோதனை இன்று (14) நடத்தப்படவுள்ளது.


சம்பவம் தொடர்பாக காணியை பராமரித்து வந்த ஒருவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், மின்வேலி அமைக்கப்பட்டிருந்த காணியின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.


சம்பவம் குறித்து ஒக்கம்பிட்டிய பொலிஸாரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், தலைமறைவாக உள்ள காணி உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழப்பு - ஒருவர் கைது மொனராகலை மாவட்டத்தின் ஒக்கம்பிட்டிய, மாளிகாவில ஜோதியாமுன பிரதேசத்தில் விவசாய நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி  இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.காட்டு விலங்குகளிடமிருந்து கரும்பு, பப்பாளி, வாழை மற்றும் நெல் பயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலி அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.மின்வேலியுடன் தொடர்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சுமார் 20 வயதுடைய, ஆறு அடி உயரமுள்ள ஆண் யானையும், ஒரு வயதுடைய நான்கு அடி உயரமுள்ள யானைக் குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த இரண்டு காட்டு யானைகளின் உடற்கூறாய்வு  பரிசோதனை இன்று (14) நடத்தப்படவுள்ளது.சம்பவம் தொடர்பாக காணியை பராமரித்து வந்த ஒருவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், மின்வேலி அமைக்கப்பட்டிருந்த காணியின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.சம்பவம் குறித்து ஒக்கம்பிட்டிய பொலிஸாரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், தலைமறைவாக உள்ள காணி உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement