• Jun 24 2026

"என்னப்பா உங்க அப்பாவைக் காணோம்?" அனல்பறந்த விஜயின் உரை - அதிர்ந்துபோன சட்டசபை!

shanu / Jun 23rd 2026, 4:19 pm
image

உங்க அப்பா இங்க தான் இருப்பார்னு சொன்னாங்க. அதான் தேடிக்கிட்டிருக்கன். எங்கப்பா உங்க அப்பாவ காணோம். என்று  சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை அதிர வைத்துள்ளது.  


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம்  திகதி ஆரம்பமாகியது. 


இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், நேற்று சட்டசபையில்  இடம்பெற்றபோது  எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என அங்கு வலியுறுத்தப்பட்டது. 


அதற்கமைய ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக குறித்து கடுமையாக விமர்சித்தார். 


ஆக்கப்பூர்வமான கருத்துகளை சொன்னால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, ஊழல் செய்ய மாட்டோம், ஊழல் செய்ய விடமாட்டோம், ஊழல் செய்தவர்களையும் விடமாட்டோம்” என்று தெரிவித்தார். 


பின்னர் உதயநிதி ஸ்டாலினின் கேலிப் பேச்சுக்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், உங்க அப்பா இங்க தான் இருப்பார்னு சொன்னாங்க. அதான் தேடிக்கிட்டிருக்கன். எங்கப்பா உங்க அப்பாவ காணோம். எங்களுக்கும் நய்யாண்டியா பேசத் தெரியும் என்று கூறினார். 


முதலமைச்சர் விஜயின் அனல்பறந்த உரையால் சட்டசபையே ஒரு கணம் அதிர்ந்து போனது. 

 

இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில்  ஈடுபட்டதுடன்  திமுக அரசை முதல்வர் விமர்சித்த நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

"என்னப்பா உங்க அப்பாவைக் காணோம்" அனல்பறந்த விஜயின் உரை - அதிர்ந்துபோன சட்டசபை உங்க அப்பா இங்க தான் இருப்பார்னு சொன்னாங்க. அதான் தேடிக்கிட்டிருக்கன். எங்கப்பா உங்க அப்பாவ காணோம். என்று  சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை அதிர வைத்துள்ளது.  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம்  திகதி ஆரம்பமாகியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், நேற்று சட்டசபையில்  இடம்பெற்றபோது  எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என அங்கு வலியுறுத்தப்பட்டது. அதற்கமைய ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக குறித்து கடுமையாக விமர்சித்தார். ஆக்கப்பூர்வமான கருத்துகளை சொன்னால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, ஊழல் செய்ய மாட்டோம், ஊழல் செய்ய விடமாட்டோம், ஊழல் செய்தவர்களையும் விடமாட்டோம்” என்று தெரிவித்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலினின் கேலிப் பேச்சுக்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், உங்க அப்பா இங்க தான் இருப்பார்னு சொன்னாங்க. அதான் தேடிக்கிட்டிருக்கன். எங்கப்பா உங்க அப்பாவ காணோம். எங்களுக்கும் நய்யாண்டியா பேசத் தெரியும் என்று கூறினார். முதலமைச்சர் விஜயின் அனல்பறந்த உரையால் சட்டசபையே ஒரு கணம் அதிர்ந்து போனது.  இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில்  ஈடுபட்டதுடன்  திமுக அரசை முதல்வர் விமர்சித்த நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement